Posts

Showing posts from 2008

HAPPY EID MUBARAK

Image
இன்றுடன் புனித ரமளான் எம்மை எல்லாம் விட்டு விடை பெற்றுச் செல்கின்றது . ஒரு மாத காலமாக நாம் செய்த அமல்களை எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்றுக் கொள்ளட்டும். அனைவரின் நலன்களுக்காகவும் எமது பிராத்தனைகளை செய்வோம்.

TOWER BRIDGE OPENING LIVE EXPERIENCE

நண்பர் அன்வர் லண்டனில் ...

Image
அன்வர் ஒரு மாத கால உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுகேம்பிரிட்ஜ் வந்திருந்தார். சென்ட்ரல் லண்டனை சுற்றி காட்ட அழைத்துச் சென்றேன்.டவர் பிரிட்ஜ் இல் இன்று நல்ல அதிர்ஷ்டமும் காத்திருந்தது. டவர் பிரிட்ஜ் திறந்துமூடும் காட்சி வியக்க வைத்தது. எனக்கும் இன்றுதான் சந்தர்ப்பம் கிடைத்தது..

நோன்பு பற்றிய மருத்துவ கட்டுரை ஒன்று

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் நோன்பு  மறுமைக்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் Dr.   A . ஷேக் அலாவுதீன்  MD  (Alt, Med), H.H.A, A.T.C.M (China) ZHEJIANG UNIVERSITY, HANGZHOU – CHINA CHINESE TRADITIONAL MEDICINE MEDICAL CONSULTANT HOSPITAL, RIYADH, SAUDI ARABIA ரியாத்-0505258645 தமிழ்நாடு: 9442871075 ____________ _________ _________ _________ _ வசந்த காலத்தின் வாயிற்படி தான் நோன்பு என்றால் அது மிகையாகாது. உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் ஓர் அற்புத மாதம். இந்த ஆரோக்கியத்தை நம்மில் எத்தனை பேர் நோன்பின் மூலம் பெற்றுள்ளோம் என்றால் அது மிக சொற்பமே. நோன்பு வைத்து கடமையை நிறைவேற்றி நன்மையைப் பெற்றுக் கொள்ளும் நாம் அதை முறையாக வைத்து, முறையாக திறக்காத காரணத்தால் நாம் உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் பதில், உள்ளத்துக்கு சோர்வையும், உடலுக்கு நோயையும் பெற்றுக் கொள்கிறோம். ஆரோக்கிய வழியில் நோன்பு வைப்பது பற்றி தெரிந்து கொண்டு, நோன்பு வைப்போமானால் நாம் இம்மை மறுமை நன்மைகளைப் பெற்று உள்ளத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். நுரைய

புனித ரமழானை வரவேற்போம்

வாழ்த்துக்கள்

Image
எங்களின் நண்பர் ரிசான் செய்னுலாப்டீன் (ஜெமினா) அவர்களின் மனைவி ஆண்குழந்தை ஒன்றை பெற்றெடுத்து "வாப்பா" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார் . நீங்களும் உங்கள் குடும்பமும் நீடுழி காலம் வாழ என் இதய பிராத்தனைகள். வாழ்த்துக்கள் நண்பரே!

இன்னுமொரு மரணச் செய்தி

Image
நவமணி பிரதம ஆசிரியர் எம் . பி . எம் அஸ்ஹர் அவர்கள் நேற்று காலமாகி விட்டார்களாம் . முன்னணி பத்திரிகையாளர் . " பாராளு மன்றத்தில் இன்று " என்ற பத்தியை இருபத்தைந்து ஆண்டுகளாக தினபதி வீரகேசரி பத்திரிக்கைகளில் எழுதி வந்தவர் . நான் அவரை கடைசியாக நவமணி காரியாலயத்தில் ௨004 ஆம் ஆண்டில் சந்தித்திருந்தேன் . மூத்த பத்திரிக்கையாளர் . இவரின் இழப்பு முஸ்லிம்களுக்கு பெரும் இழப்பு என்பது குறிப்பிடத்தக்கது . யா அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவர்க்கத்தை பரிசளிப்பாயாக . ஆமீன்

துயரச் செய்தி ஒன்று

ரபிக் சேர் இன்று இறைவனடி சேர்ந்து விட்டார்களாம் . கடந்த சில மாதங்களாக நோய் வாய்ப்பற்று மஹரகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வநதுள்ளார் . கல்முனை ஸாஹிறா கல்லூரியில் ஆசிரியராக பணி புரிந்தவர் . A .M.M.Rafeek.ரியாஜ் இன் அன்பு தகப்பனார்.சஜிரின் சாச்சா. யா அல்லாஹ்! அவரின் பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை கொடுப்பாயாக

ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறையில்.....

Image
ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறைக்கு நண்பர்கள் எல்லாம் சேர்ந்து கடற்கரை ஒன்றை தேடி சென்றபோது ....... அன்று காலநிலை எதிர்பார்த்த அளவு சூடாக இருக்க வில்லை. நண்பர் Rasalie அவர்களின் பூந்தோட்டம்தான் எங்களின் BBQ திட்டத்துக்கு இலக்கானது. நண்பர் என்ன நினைத்தாரோ புரிய வில்லை. ஆனால் சேர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தார்.