எனது சுனாமி நினைவலைகள் .

இன்னும் என் நினைவில் நிழலாடும் சுனாமியின் வடுக்கள் ... அன்று இதே தினத்தில் அதிகாலை திடிரென வந்த தொலைபேசி அழைப்பு சொன்ன செய்தி இன்றும் என் காதில் ரீங்காரம் செய்கின்றது.. "எம் ஊருக்குள் கடல் வந்துட்டாம்..சாய்ந்தமருது கல்யாண வீதியெல்லாம் கடந்து வந்துட்டாம். ரிஸ்வி டாக்டர் மௌத்தாஹிட்டாராம் ... "இன்னாளில்லாஹி வயின்னா இளைகி ராஜிஊன்" என்ற பிராத்தனைகளுடன் ஒரு கணம் என் ஊரைய்யும் என் உறவுகளையும் நினைத்து உள்ளம் பத பதைத்து... செய்திகளின் உண்மை நிலவரம் அறிய எனது சகோதரியின் தொலைப்பேசிக்கு அழைத்தபோது. ஒரே சத்தத்துடன் சட்டென்று அறுந்து போன உணர்வு.. கடல் வந்த எல்லையை அறிந்ததபோது. எனது தாய் மற்றும் உடன் பிறப்புக்களின் நிலை என்னவென்று ஒரு கணம் ஊகித்து உள்ளார்ந்த பிராத்தனைகளை அனைவருக்காகவும் செய்து கொண்டு.தடுமாறிய கணப்பொழுதுகள் வாழ்வில் மறக்க முடியாத ரணங்கள் .. கடல் ஊருக்குள் வந்ததாம்!.அது எவ்வாறு சாத்தியப்படும்? வாழ் நாளில் கேள்விபடாத, கண்களால் காணாத சம்பவம்.. நம்பவே முடிய வில்லை.. செய்திகளின் உயிரோட்டம் அறியும் ஆவலில் இணைய வளம் சென்று தகவல்களை என் சகோதரர் ...