என் மூத்த சகோதரர் சம்சுதீன் அவர்களின் மூத்த மகள் நேற்று காலை வபாத்தாகி விட்டார்..
என் மூத்த சகோதரர் சம்சுதீன் அவர்களின் மூத்த மகள் நேற்று காலை வபாத்தாகி விட்டார்.. இன்னாளில்லாஹி வ இன்னா இழைய்ஹி ராஜிஊன் மகள் ரினோசா உன் இழப்பில் என் இதயம் துடிக்கிறது.. இன்னும் என் மனம் ஆறுதல் பட மறுக்கிறது.. ஒரு உயிரின் வரவு செய்தி கேட்டு உளம் மகிழ்ந்து உன்னவர்களுக்கு நீ செய்தி சொல்லி விட்டு உள மகிழ்வில் இருந்த உனக்கு இஸ்ராயில் வந்து உன் உயிரை பறிப்பார் என்று யாருதான் நினைத்திருப்போம் மகளே ..? உன் மய்யிதில் என் பிரசன்னம் இல்லாது விட்டது.. உனக்கு கபூர் வெட்டி என் கையால் உன் மய்யித்தை தூக்கி வைத்து து ஆ செய்து அனுப்பும் பாக்கியம் இல்லாது விட்டது மகள்.. விரும்பாமல் தொடரும் வெளி நாட்டு வாழ்வின் நியதி இது.எப்போது வருமோ விடிவு இதுக்கு..? ரெண்டு பிள்ளை செல்வங்கள் உன் நாமம சொல்ல விட்டு சென்று விட்டாய் மகளே பச்சிளம் குழந்தைகள் அவர்கள் எப்படி நாங்கள் ஆறுதல் சொல்வோம் ? உன் மறைவால் துடிக்கும் உன் ஆசை கணவன், உன் அன்பின் நண்பன் முனிருக்கு எப்படி நான் ஆறுதல் கூறுவோம் மகள...