என் சமூகத்தின் உரிமை காக்க புறப்பட்ட தலைமை களுக்கு..
அடக்குமுறை அரசாட்சியின் அதிகார வெறிக்குள் அகப்பட்டுள்ள அடையாளச்சின்னம் ஆசாத் சாலி.. இன்று -அவர் நாளை- யாரோ ..? முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்காய் உரத்து குரல் கொடுத்த உத்தம ஜீவன் இன்று உள்ளம் குமுறுகிறான் நாலாம் மாடிக்குள் நின்று எங்கே எமது உரிமைகளுக்காய் உயிரையே விடுவோம் என்றவர்கள்..? முஸ்லிம் களின் ஏக பிரதி நிதிகள் "நாங்கள்" தான் என்று மார் தட்டி கொண்டவர்கள்..? "சாட்சி" இன்றி "காட்சி" சொல்லி "கட்சிகள்" மாறி "காங்கிரஸ்" என்றும் "கொன்கிறேஸ் " என்றும் கட்சி அமைத்தவர்கள் எங்கே..? "ஹலால் எங்கள் உரிமை." விடவே மாட்டோம் வீதியில் இரங்கி வீரா வேஷம் பேசி வெற்றி பெறுவோம் என்றவர்கள் எங்கே..? பள்ளிகள் உடைப்பு ஹலால் ,ஹபாயா கலவரம் பேஷன் பக் எரிப்பு பாதையில் சென்ற பாமர முஸ்லிம்கள் மீது கல்லெறி, அதிகாரக் குரல் இவைகளெல்லாம் நடந்தும் இல்லை அப்படி இல்லை "ஊடகங்களின் ஊத்தப் பேச்சுகள்" என்று உள்ளம் கூசாது சுய நலம் பேணி தாரை வைத்த தலைவர்கள் எங்கே ..? ஒருவரை ஒருவ...