Posts

G.C.E. O/L ,92 Get together

Image

My Tumblr Site

Visit my Tumblr Page

என் சமூகத்தின் உரிமை காக்க புறப்பட்ட தலைமை களுக்கு..

Image
அடக்குமுறை  அரசாட்சியின்  அதிகார வெறிக்குள்  அகப்பட்டுள்ள    அடையாளச்சின்னம்  ஆசாத் சாலி.. இன்று -அவர் நாளை- யாரோ ..? முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்காய் உரத்து குரல் கொடுத்த  உத்தம ஜீவன் இன்று உள்ளம் குமுறுகிறான்   நாலாம் மாடிக்குள் நின்று எங்கே எமது உரிமைகளுக்காய் உயிரையே விடுவோம் என்றவர்கள்..? முஸ்லிம் களின் ஏக பிரதி நிதிகள்  "நாங்கள்" தான் என்று மார் தட்டி கொண்டவர்கள்..? "சாட்சி" இன்றி "காட்சி" சொல்லி "கட்சிகள்" மாறி "காங்கிரஸ்" என்றும் "கொன்கிறேஸ் " என்றும் கட்சி அமைத்தவர்கள் எங்கே..? "ஹலால் எங்கள் உரிமை." விடவே மாட்டோம் வீதியில் இரங்கி வீரா வேஷம் பேசி வெற்றி பெறுவோம் என்றவர்கள் எங்கே..? பள்ளிகள் உடைப்பு ஹலால் ,ஹபாயா   கலவரம் பேஷன் பக் எரிப்பு  பாதையில் சென்ற  பாமர முஸ்லிம்கள் மீது கல்லெறி, அதிகாரக் குரல் இவைகளெல்லாம் நடந்தும் இல்லை  அப்படி இல்லை "ஊடகங்களின் ஊத்தப் பேச்சுகள்" என்று  உள்ளம் கூசாது சுய நலம் பேணி தாரை வைத்த தலைவர்கள் எங்கே ..? ஒருவரை ஒருவ...

வெள்ளி சிந்தனை

Image
முகப் பத்தகத்தில் இன்று படித்ததில் பிடித்தது இன்றைய சிந்தனைக்காக  உடல் நலம் வேண்டுமா? நோன்பு வையுங்கள்! முக அழகு வேண்டுமா? தஹஜ்ஜுத் தொழுங்கள்!  உயர்ந்த வாழ்வு வேண்டுமா? குர்ஆனை அழகு பட ஓதுங்கள்!  நற்பாக்கியம்வேண்டுமா? நேரம் தவறாது தொழுங்கள் ! மகிழ்ச்சி வேண்டுமா? பாவமன்னிப்பு தேடுங்கள்!  கவலை நீங்க வேண்டுமா? அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள்!  நெருக்கடி நீங்க வேண்டுமா? ”லாஹவ்ல வலாகுவ்வத இல்லா பில்லா” அதிகம் ஓதுங்கள்! வாழ்வில் அபிவிருத்தி வேண்டுமா?   சலவாத் ஓதுங்கள் !  கஷ்டப்படாமல் நன்மை வேண்டுமா? இதை நண்பர்களுக்கு அனுப்புங்கள்!   Image Via keepcalm-o-matic

ஈத் பெருநாள் எல்லோரும் கொண்டாடுவோம்

ஈத் பெருநாள் பற்றிய  எனது கட்டுரை ஒன்றின் ஒலிவடிவம் கீழுள்ள இணையத்தளத்தினை க்ளிக் செய்வதன் மூலம் கேட்டு மகிழலாம்

என் மூத்த சகோதரர் சம்சுதீன் அவர்களின் மூத்த மகள் நேற்று காலை வபாத்தாகி விட்டார்..

என் மூத்த சகோதரர் சம்சுதீன் அவர்களின்   மூத்த மகள்  நேற்று காலை வபாத்தாகி  விட்டார்.. இன்னாளில்லாஹி வ இன்னா இழைய்ஹி ராஜிஊன்  மகள் ரினோசா உன் இழப்பில் என் இதயம் துடிக்கிறது.. இன்னும் என் மனம்  ஆறுதல் பட மறுக்கிறது.. ஒரு   உயிரின் வரவு செய்தி கேட்டு உளம் மகிழ்ந்து  உன்னவர்களுக்கு நீ செய்தி   சொல்லி விட்டு உள  மகிழ்வில் இருந்த உனக்கு  இஸ்ராயில்  வந்து உன் உயிரை பறிப்பார் என்று  யாருதான் நினைத்திருப்போம் மகளே ..? உன் மய்யிதில் என் பிரசன்னம் இல்லாது விட்டது.. உனக்கு கபூர் வெட்டி என் கையால் உன் மய்யித்தை  தூக்கி வைத்து து ஆ செய்து அனுப்பும் பாக்கியம் இல்லாது விட்டது மகள்..  விரும்பாமல் தொடரும் வெளி நாட்டு வாழ்வின் நியதி இது.எப்போது வருமோ விடிவு இதுக்கு..? ரெண்டு பிள்ளை செல்வங்கள் உன் நாமம சொல்ல விட்டு சென்று விட்டாய் மகளே  பச்சிளம் குழந்தைகள் அவர்கள் எப்படி நாங்கள் ஆறுதல்    சொல்வோம் ? உன் மறைவால் துடிக்கும் உன் ஆசை கணவன், உன் அன்பின் நண்பன் முனிருக்கு எப்படி நான் ஆறுதல் கூறுவோம் மகள...

வைர விழா கொண்டாடும் இங்கிலாந்தின் மகாராணிக்கு இனிய வாழ்த்துக்கள்

Image
இங்கிலாந்தின் இரண்டாவது எலிசபத் மக ராணியாக பதவி ஏற்று இன்று ஆறாம் நாள் பெப்ரவரி மாதம் அறுபது ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் இங்கிலாந்து நாட்டின் அரசிக்கு என்  உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.  இந்த விசேட தினத்தை முன்னிட்டு நான் அனுப்பிய   வாழ்த்துக்கு  பக்கிங்க்ஹாம் மாளிகை  விசேட நன்றிகளை தெரிவித்து  வாழ்த்து அட்டைகளையும் இலத்திரனியல் மடல் மூலம் அனுப்பி உள்ளமை மகா ராணி மக்கள் மீது கொண்டுள்ள  ஆர்வத்துக்கு சான்று பகர்கிறது எனலாம்  ( இங்கே அழுத்தி மக ராணியாரின் அரண்மனை அனுப்பிய பதில் செய்தி மடலை பார்வை இடலாம் ) தனது நாட்டுக்காக தன்னை அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் மகா ராணியார் தனது மக்கள் தரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து உள்ளதுடன் அடுத்த ஆண்டில் இருந்து வெளி நாட்டு சுற்றுப் பயனங்கள தொடர உத்தேசம் கொண்டுள்ளதாகவும் கூறி உள்ளார். அடுத்த ஆண்டில் இலங்கையில் நடை பெற உள்ள பொது நலவாய அரச தலைவர்களின் மா நாட்டில் கலந்து கொள்வதாகவும் பக்கிங்க்ஹாம் மாளிகை தெரிவித்தும் உள்ளது.. 60௦ ஆண்டு வெள்ளி விழ கொண்டாடும் மகா ராணியாரின் ச...