பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் நோன்பு மறுமைக்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் Dr. A . ஷேக் அலாவுதீன் MD (Alt, Med), H.H.A, A.T.C.M (China) ZHEJIANG UNIVERSITY, HANGZHOU – CHINA CHINESE TRADITIONAL MEDICINE MEDICAL CONSULTANT HOSPITAL, RIYADH, SAUDI ARABIA ரியாத்-0505258645 தமிழ்நாடு: 9442871075 ____________ _________ _________ _________ _ வசந்த காலத்தின் வாயிற்படி தான் நோன்பு என்றால் அது மிகையாகாது. உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் ஓர் அற்புத மாதம். இந்த ஆரோக்கியத்தை நம்மில் எத்தனை பேர் நோன்பின் மூலம் பெற்றுள்ளோம் என்றால் அது மிக சொற்பமே. நோன்பு வைத்து கடமையை நிறைவேற்றி நன்மையைப் பெற்றுக் கொள்ளும் நாம் அதை முறையாக வைத்து, முறையாக திறக்காத காரணத்தால் நாம் உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் பதில், உள்ளத்துக்கு சோர்வையும், உடலுக்கு நோயையும் பெற்றுக் கொள்கிறோம். ஆரோக்கிய வழியில் நோன்பு வைப்பது பற்றி தெரிந்து கொண்டு, நோன்பு வைப்போமானால் நாம் இம்மை மறுமை நன்மைகளைப் பெற்று உள்ளத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். நுரைய...