என் மூத்த சகோதரர் சம்சுதீன் அவர்களின் மூத்த மகள் நேற்று காலை வபாத்தாகி விட்டார்..


என் மூத்த சகோதரர் சம்சுதீன் அவர்களின்   மூத்த மகள் 
நேற்று காலை வபாத்தாகி  விட்டார்..


இன்னாளில்லாஹி வ இன்னா இழைய்ஹி ராஜிஊன் 




மகள் ரினோசா


உன் இழப்பில் என் இதயம் துடிக்கிறது..
இன்னும் என் மனம்  ஆறுதல் பட மறுக்கிறது..
ஒரு   உயிரின் வரவு செய்தி கேட்டு உளம் மகிழ்ந்து 
உன்னவர்களுக்கு நீ செய்தி   சொல்லி விட்டு
உள  மகிழ்வில் இருந்த உனக்கு 
இஸ்ராயில்  வந்து உன் உயிரை பறிப்பார் என்று 
யாருதான் நினைத்திருப்போம் மகளே ..?


உன் மய்யிதில் என் பிரசன்னம் இல்லாது விட்டது..
உனக்கு கபூர் வெட்டி என் கையால் உன் மய்யித்தை  தூக்கி வைத்து து ஆ செய்து அனுப்பும் பாக்கியம் இல்லாது விட்டது மகள்.. 


விரும்பாமல் தொடரும் வெளி நாட்டு வாழ்வின் நியதி இது.எப்போது வருமோ விடிவு இதுக்கு..?


ரெண்டு பிள்ளை செல்வங்கள் உன் நாமம சொல்ல விட்டு சென்று விட்டாய் மகளே 
பச்சிளம் குழந்தைகள் அவர்கள் எப்படி நாங்கள் ஆறுதல்    சொல்வோம் ?


உன் மறைவால் துடிக்கும் உன் ஆசை கணவன், உன் அன்பின் நண்பன் முனிருக்கு எப்படி நான் ஆறுதல் கூறுவோம் மகளே.?


நினைத்து நினைத்து என் மனம் வேதனை படுகின்றது மகளே..
உன் SKYPE  கால் அன்று தவறி விட்டது அன்று...


என் மகள் மர்யம் உன்னை நேரில் காண பாக்கியம் இல்லாது  விடடாள் .. நான் எப்படி என் மகளுக்கு உங்களை  அறிமுகப் படுத்துவேன் மகளே..


என் மழலைசெல்வத்தை உன் கையால் தூக்கி விளையாட உனக்கு அல்லாஹ் சந்தர்ப்பம் தராது அவன் பாள் எடுத்து விட்டான் 


வெளி நாட்டு வாழ்வு தந்த பரிசா இது...?


என் இதயம் இன்னும் துடிக்கிறது மகளே ..
"சலாத்துள் மய்யித்" தொழுவித்த ஆறுதல் எனக்கு 
என்றாலும் என் இதயம்
 உறவுகளை பிரிந்து  பிரிந்து தொடரும் இந்த வெளி நாட்டு வாழ்வை எண்ணி வலிக்கிறது..


மகள் உன் ஆத்மா சாந்தி அடையட்டும் 
வல்ல அல்லாஹ் உன் பாவங்களை நிச்சயம் மன்னிப்பான் .
நீ விட்டுச் சென்ற இரண்டு பிள்ளை செல்வங்களும்  உனக்காக   வாழ் நாள் வரை
 "Rab er hum huma kama rabbayaani sagheera.."
என்று பிராத்திக்க பயிற்று   விப்போம்


யா அல்லாஹ், எங்களை விட இறக்கம் உள்ளவன் நீ .
என் மகளின் "கலா கதர்" படியே  எனது மகளை இளம் வயதில் உன் பாள் ஈர்த்து விட்டாய் 


இவ்வுலகில் அவள் செய்த பாவங்கள் மன்னித்து 
நன்மைகளை ஏற்று கொண்டு "ஜன்னத்துல் பிர்தௌஸ்"
எனும் சிறப்புப் பொருந்திய சொர்கத்தை அன்பளிப்பாகிடு..


இழப்பால் துடிக்கும் எங்கள் இதயங்களுக்கு உன் இரக்கத்தையும் அருளையும் தந்தருள்..
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 



Comments

Popular posts from this blog

வைர விழா கொண்டாடும் இங்கிலாந்தின் மகாராணிக்கு இனிய வாழ்த்துக்கள்

எனது சுனாமி நினைவலைகள் .

JAZAH CONSULTANTS