என் சமூகத்தின் உரிமை காக்க புறப்பட்ட தலைமை களுக்கு..





அடக்குமுறை 
அரசாட்சியின் 
அதிகார வெறிக்குள் 
அகப்பட்டுள்ள   
அடையாளச்சின்னம் 
ஆசாத் சாலி..
இன்று -அவர்
நாளை- யாரோ ..?

முஸ்லிம் சமூகத்தின்
உரிமைக்காய்
உரத்து குரல் கொடுத்த 
உத்தம ஜீவன் இன்று
உள்ளம் குமுறுகிறான்  
நாலாம் மாடிக்குள் நின்று

எங்கே எமது உரிமைகளுக்காய்
உயிரையே விடுவோம்
என்றவர்கள்..?
முஸ்லிம் களின் ஏக பிரதி நிதிகள்
 "நாங்கள்" தான் என்று மார் தட்டி கொண்டவர்கள்..?

"சாட்சி" இன்றி
"காட்சி" சொல்லி
"கட்சிகள்" மாறி
"காங்கிரஸ்" என்றும்
"கொன்கிறேஸ் " என்றும்
கட்சி அமைத்தவர்கள் எங்கே..?

"ஹலால் எங்கள் உரிமை."
விடவே மாட்டோம்
வீதியில் இரங்கி
வீரா வேஷம் பேசி
வெற்றி பெறுவோம் என்றவர்கள் எங்கே..?

பள்ளிகள் உடைப்பு
ஹலால் ,ஹபாயா   கலவரம்
பேஷன் பக் எரிப்பு 
பாதையில் சென்ற 
பாமர முஸ்லிம்கள் மீது
கல்லெறி, அதிகாரக் குரல்
இவைகளெல்லாம் நடந்தும்
இல்லை  அப்படி இல்லை
"ஊடகங்களின் ஊத்தப் பேச்சுகள்" என்று 
உள்ளம் கூசாது
சுய நலம் பேணி
தாரை வைத்த தலைவர்கள் எங்கே ..?

ஒருவரை ஒருவர்
அரை கூவல் விடுத்து
ஆலாத்தி எடுத்த
அரசியல் வான்களே..

அரசில் இருந்தால்தான்
அரச தலைவரை சந்தித்துப் பேசி
தீர்வு காணலாம் என்று
காலம் சென்ற தலைவரின்
"தூர நோக்கு அரசியல்" பற்றி
ஒருவரை ஒருவர் உரசிப்பார்த்து கொள்ளும்
உத்தம புத்திரர்களே
இன்னுமா நீங்கள்  உறக்கம்.
உள்ளத்தில் இல்லையா
சமூகத்தின்
உள்ளார்ந்த இரக்கம்..!?

தலைவர்களே 
இனியாவது 
தலை நிமிர்த்துங்கள் 
கண்களை விழித்தெடுங்கள்"
சமூகத்தின்
உரிமைகளுக்காய்
உள்ளார்ந்த உணர்வுடன்
உழைக்கப் புறப்படுங்கள் -அச்சமின்றி  
வெற்றி நிச்சயம்..

ஆம்,
அதிகார வெறி பிடித்த
ஆட்சி அதிபர்களின்
அதிகாரங்களுக்குள்
அடங்கி வாசிக்கிறீர்கள்
"ஆப்பிழுத்த குரங்குகள்"- நீங்கள்
சூழ் நிலைக் கைதிகள்- நீங்கள் 
கட்சியை காப்பாற்றும் எண்ணத்துடன் 
காலில் மிதிபாடும்
கட்சித் தலைவர்கள் -நீங்கள் 
அப்படித் தானே ..?

ஆனால் ஒன்று மட்டும் உண்மை-
அரசர்களுக் கெல்லாம் "அரசன்"
ஆட்சியாளர் களுக்கெல்லாம் "ஆட்சியாளன்"
"அல்லாஹ்" ஒருவன்
"அடக்கி" வைப்பான்- அவர்களை
அவன் சொன்னபடி எம்மை
அமைத்து கொண்டால் அல்லவா.?

"குனூத்". ஓதளுக்கே
குமுறிப் பயந்த ஜீவன்கள்- அவர்கள்
"து ஆ" எனும் ஆயுதத்தால் 
தூசாகிப்  போகும் காலம்
தூரத்தில் இல்லை- அவர்களுக்கு 
உணர்ந்து கொள்ளுங்கள்

மர்ஹூம் தலைவர் அஷ்ரப்பின் 
பாசறையில் வளர்ந்த நீங்கள்
பிரிந்து நிற்கிறீர்கள், 
பதுங்கி வாழ்கிறீர்கள், 
பிதட்டி,பிதட்டிஅறிக்கை விட்டு
பம்பாத்து அரசியல் செய்கிறீர்கள் 
பட்டம், பதவி, சொகுசு வாழ்வுக்காய் 
பாவம் என்றும் பாராது பல்லை காட்டி 
"ஆமாம் சாமி" ஆகிறீர்கள் 
சமூகம் தந்த "அமானிதம்"
சாம்பலாய்ப்  போகின்றது
ஆதலால் 
முஸ்லிம் சமூகம் "சந்தியில் நிற்கின்றது
எம் சகோதரர் இன்று "கம்பி"க்குள் இருக்கிறார் 
இன்னுமா தயக்கம் 
என் அருமை சமூகத் தலைமைகளே..!?

"ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றி பிடியுங்கள் "
எம் கோமான் நபி சொன்ன படி
ஒன்று சேருங்கள் அந்த வல்ல "அல்லாஹ்" ஒருவனுக்காக... 

ஒரே குரலில் 
உரத்து உரிமைகளுக்காய் 
"முழக்கம்" இடுங்கள்!
தேர்தல் காலங்களில் 
வாய் கிழிய கத்தி
வாக்குப் பிச்சை கேட்ட போது
உங்களை நம்பி "புள்ளடி" போட்டு 
பதவி ஆசனங்களில்
"சிம்மாசனம்" ஏறச் செய்தி மக்கள் எல்லாம் 
"துஆ" எனும் ஆயுதம் கொண்டு 
போராட்டம் நடத்துவார்கள்- உங்களுக்காக 
வல்ல "அல்லாஹ்"வின் உதவி 
நிச்சயம் உங்களை நாடும்
வெற்றியுடன் வீறு நடை போடுவீர்கள் 
ஆதலால் புறப்படுங்கள் 
என் சமூகத் தலைமைகளே..


ப்ளீஸ்.. 
தாமதம் வேண்டாம்
நேற்று  ஆசாத் சாலி 
உடல் நலக் குறைவால் 
வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளாராம் 
ஊடகவியலாளர் மாநாட்டில்
அழுதழுது 
உதவி கேட்கிறாள் அவர் மகள்.
"யாரையும் ஹாஸ்பிட்டல்ல பார்க்கவும் விர்றாங்க இல்லையாம்"

ஒன்லைன்ல செய்தி பார்த்து 
கடல் கடந்து வாழும் எனக்கு உள்ளம் குமுறுது
உள் நாட்டில் என் சமூகத் தலைவர்களே 
உங்களுக்கு என்ன செய்யுது ..?
கொஞ்சம்தான் வாயத் திறங்களேன் ...


Comments

Popular posts from this blog

வைர விழா கொண்டாடும் இங்கிலாந்தின் மகாராணிக்கு இனிய வாழ்த்துக்கள்

எனது சுனாமி நினைவலைகள் .

JAZAH CONSULTANTS