இன்று ( 22 மே )உள்ளுராட்சி மற்றும் ஐரோப்பிய தேர்தல் தினம்


இன்று ( 22 மே )உள்ளுராட்சி மற்றும் ஐரோப்பிய தேர்தல் நடைபெறும் தினம்.. இந்த நேரத்தில் , புலம்பெயர்ந்து வந்து இங்கிலாந்தில் வசித்து வரும் அனைவரும் தங்களின் வாக்குரிமையை சிறப்பாக சிந்தித்து பயன்படுத்த வேண்டிய அவசியமானதாகும்

இன்று நடை பெரும் ஐரோப்பிய தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானிய ஒரு உறுப்புரிமை நாடாக தொடர்ந்தும் இருக்க வேண்டுமா அல்லது விலக வேண்டுமா என்பது முக்கி இடம் பெறுகிறது. 



ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானிய ஒரு உறுப்புரிமை நாடாக தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட முடிவாகும் .ஏனெனில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு உறுப்புரிமை நாடாக இருப்பதால் உலகின் தன்னிகரற்ற ஒற்றைச் சந்தை வலு கொண்ட (கிட்டத்தட்ட 11 ட்ரில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட் அமெரிக்க மற்றும் ஜப்பானை விட )அமைப்பின் வலு சேர்க்கும் ஒரு நாடாகத் திகழ்கின்றது 

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள சனத் தொகை சுமார் 500 மில்லியன் .இம் மக்கள் பலம் பிரித்தானிய வியாபாரச் செயற்பாடுகளில் பெரும் பங்கு வகிக்கின்றது .அது மட்டும் அன்றி சுங்க வரி நிலுவைகள் ஐரோப்பிய ஒன்றிய அங்கம் வகிக்கும் ஒவ்வொரு நாடுகளின் சுங்கக கொள்கைகள் அல்லாமல் ஒரு பொதுவான சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 50 வீதமான மூலதனம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிருந்து நேரடியாகவே கிடைக்கப்படுகின்றது அத்தோடு 40 வீதமான பிரித்தானிய ஏற்றுமதி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கே செல்கின்றது .இதனால் பிரித்தானிய சுமார் 200 பில்லியன் பவுண்ட் ஏற்றுமதி வருமானத்தை இலகு படுத்தி பிரித்தானிய பொருளாதாரத்துக்கு வலு சேர்க்கின்றது 

அண்மையில் நடந்த ஐரோப்பிய வர்த்தக உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பிரமுகர்களில் பெரும்பாலானோர் பிரித்தானியாவின் முன்னுதாரனமான் வியாபாரச் செயற்பாடுகளும் ,சிறு கைத்தொழில் மற்றும் சுய தொழில் முயட்சியான்மையை மேன்படுத்தும் நோக்கில் விரிபு படுத்தப்படும் நடவடிக்கைகளும் அங்கத்துவ நாடுகளுக்கு உந்து சக்தியாகவே இருப்பதாக தெரிவித்து இருந்தனர் .இவை மட்டும் அன்றி பல்வேறான நலன்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் பங்காளராக இருப்பதன் மூலம் அடையப் பெறலாம். மற்றும் குடிவரவாளர்களின் அதிகரிப்பை கட்டுப் படுத்துவது பற்றிய கட்சிகளின் கொள்கைகளும் எமது வாக்கு உரிமையை உள்ளூராட்சி தேர்தல் களத்தில் தீர்மானிக்க வேண்டிய முக்கிய கருப் பொருள்களில் ஒன்றாகும்

குடிவரவாளர்கள் பொருளாதாரத்துக்கு நிறையே பங்களிப்பை செய்து வருவதை அறிந்திருந்தும அவர்களின் வருகையை கட்டுப் படுத்தும் உச்ச கட்ட மாற்றங்கள் இந்த அரசின் காலத்திலேயே அரங்கேறி இருகின்றன.

நாள் தோறும் மாறும் குடிவரவுக் கொள்கைகள், ,சர்வதேச மாணவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள பகுதி நேர வேலை உத்த்தரவுக்கான தடைகள். வெளி நாடுகளில் நிராகரிக்கப்படும் விசாக்களுக்கான மென் முறையீட்டு வலி முறைகளை தடை செய்து பன்மடங்கான விசா கட்டணங்களை அறவிடும் செயற்பாடுகள் இவ் அரசாங்கத்தின் காலப் பகுதிகளிலேயே நடை பெற்றுக் கொண்டிருகின்றது .

அது மற்றும் அன்றி குடி வரவுக் கொள்கையை கல்வி சர்ர் நடவடிக்கை நிறுவனங்களுடன் தொடர்பு படுத்தி கல்வி சார் நடவைக்கை மற்றும் உயர் கல்விச்க் சான்றிதழ்கள் வழங்கும் நிறுவங்கள் திடிரென மூடப்பட்டமை உலகெங்கும் புகழ்ந்து பேசப்பட்ட பிரித்தானிய கல்விச் சான்றிதல்களை கேள்விக்குறியாகி சர்வேதேச மாணவர் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் விசனத்தை வெளிப்படுத்தி இருப்பது இங்கு அதிகமானோர் அறியாமல் இருந்திருக்கலாம்.(E.g. Institute of Administrative Management (IAM), London Centre of Marketing (LCM),ABP etc)

TIer 4 பட்டியல் என நடைமுறையில் பல்வேறு சிக்கல்களை உருவாக்கி ,கல்லூரிகளையும் புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களையும் (உதாரணமாக London Metropolitan University, Glasgow Caledonian University,Teeside Univeristy ),பெயர் பெற்று விளங்கிய பல்வேறு கல்லூரிகளையும் (TASMAC, Rayat London College,Cavendish College LondonSAM,College of Technology.Etc.) மூடி சர்வேதேச மாணவர்களின் சுதந்திர கல்வி செயற்பாடுகளுக்கு களங்கம் விளைவித்து அவர்களை நட்டாற்றில் விட்டு வேடிக்கை பார்த்துக் ஒண்டிருக்கும் இந்த அரசின் செயற்பாடுகள் உங்களது வாக்குரிமையை தீர் மானிக்கும் சக்தியாட்டும் 

இவை மட்டும் அன்றி சுகாதரத்துறை, இலவச மதிய உணவு, உள்ளூராட்சி வரி, தொழில் வாய்ப்பினை ஏற்ப்படுத்திய வழிமுறைகள் ,பாது காப்பு, சுற்றுச் சூழல் ,கழிவகற்றல் , போன்ற விடயங்களில் பொது மக்களாகிய நீங்கள் அனுபவிக்கும் சுதந்திரம் இன்று நடை பெரும் உள்ளூராட்சி தேர்தலில் முக்கிய கவனம் செலுத்தப்படும் கட்சிகளின் தேர்வுக்கான காரணங்களாக இருக்கட்டும் 

ஆதலால் எனது தெரிவு ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானிய ஒரு அங்கத்துவ நாடாக இருக்க வேண்டும் என்பதை ஆதரிக்கும் வேலை கடந்த 15 வருடங்களாக நான் வசித்துவரும் நியு ஹாம் தேர்தல் தொகுதியில் ஆட்சி அதிகாரத்துடன் பல்லாண்டுகாலம் சிறப்பான ஆட்சி செய்து வரும் தொழில் சங்க கட்சியை ஆதரித்து ஆட்சி மாற்றத்திற்கான சிந்தனையை நோக்கி பயனிப்பதாகும் 

நன்றி

ஜெஸீம் அப்துல் ஹமீட்
#Localelection2014 

Comments

Popular posts from this blog

வைர விழா கொண்டாடும் இங்கிலாந்தின் மகாராணிக்கு இனிய வாழ்த்துக்கள்

எனது சுனாமி நினைவலைகள் .

JAZAH CONSULTANTS