எங்களின் நண்பர் ரிசான் செய்னுலாப்டீன் (ஜெமினா) அவர்களின் மனைவி ஆண்குழந்தை ஒன்றை பெற்றெடுத்து "வாப்பா" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். நீங்களும் உங்கள் குடும்பமும் நீடுழி காலம் வாழ என் இதய பிராத்தனைகள்.வாழ்த்துக்கள் நண்பரே!
கொரோனா காலத்தில் மக்கள் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, சளி, இருமல் இப்படி பல நோய்களால் பீடிக்கப்பட்டு வருந்திக் கொண்டிருக்கிறார்கள். அது தவிர நாம் பீடிக்கப்பட்டிருக்கும் நோய் கோரனாவா டெங்கா அல்லது வேறு ஏதும் வைரஸ் காய்ச்சலா என்று சந்தேகிப்போருக்கு இந்தியாவை சேர்ந்த வைத்தியர் அருண் குமார் அவர்கள் வீட்டில் சிகிச்சை எடுப்பது எப்படி பற்றி தெளிவாக விளக்குகிறார் . வருத்தங்களால் மன அழுத்தங்களுக்கு உள்ளாகி வருந்துவோருக்கு ஆறுதல் தரும் காணொளியாகவும் உள்ளது .
இன்னும் என் நினைவில் நிழலாடும் சுனாமியின் வடுக்கள் ... அன்று இதே தினத்தில் அதிகாலை திடிரென வந்த தொலைபேசி அழைப்பு சொன்ன செய்தி இன்றும் என் காதில் ரீங்காரம் செய்கின்றது.. "எம் ஊருக்குள் கடல் வந்துட்டாம்..சாய்ந்தமருது கல்யாண வீதியெல்லாம் கடந்து வந்துட்டாம். ரிஸ்வி டாக்டர் மௌத்தாஹிட்டாராம் ... "இன்னாளில்லாஹி வயின்னா இளைகி ராஜிஊன்" என்ற பிராத்தனைகளுடன் ஒரு கணம் என் ஊரைய்யும் என் உறவுகளையும் நினைத்து உள்ளம் பத பதைத்து... செய்திகளின் உண்மை நிலவரம் அறிய எனது சகோதரியின் தொலைப்பேசிக்கு அழைத்தபோது. ஒரே சத்தத்துடன் சட்டென்று அறுந்து போன உணர்வு.. கடல் வந்த எல்லையை அறிந்ததபோது. எனது தாய் மற்றும் உடன் பிறப்புக்களின் நிலை என்னவென்று ஒரு கணம் ஊகித்து உள்ளார்ந்த பிராத்தனைகளை அனைவருக்காகவும் செய்து கொண்டு.தடுமாறிய கணப்பொழுதுகள் வாழ்வில் மறக்க முடியாத ரணங்கள் .. கடல் ஊருக்குள் வந்ததாம்!.அது எவ்வாறு சாத்தியப்படும்? வாழ் நாளில் கேள்விபடாத, கண்களால் காணாத சம்பவம்.. நம்பவே முடிய வில்லை.. செய்திகளின் உயிரோட்டம் அறியும் ஆவலில் இணைய வளம் சென்று தகவல்களை என் சகோதரர் ...
முகப் பத்தகத்தில் இன்று படித்ததில் பிடித்தது இன்றைய சிந்தனைக்காக உடல் நலம் வேண்டுமா? நோன்பு வையுங்கள்! முக அழகு வேண்டுமா? தஹஜ்ஜுத் தொழுங்கள்! உயர்ந்த வாழ்வு வேண்டுமா? குர்ஆனை அழகு பட ஓதுங்கள்! நற்பாக்கியம்வேண்டுமா? நேரம் தவறாது தொழுங்கள் ! மகிழ்ச்சி வேண்டுமா? பாவமன்னிப்பு தேடுங்கள்! கவலை நீங்க வேண்டுமா? அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள்! நெருக்கடி நீங்க வேண்டுமா? ”லாஹவ்ல வலாகுவ்வத இல்லா பில்லா” அதிகம் ஓதுங்கள்! வாழ்வில் அபிவிருத்தி வேண்டுமா? சலவாத் ஓதுங்கள் ! கஷ்டப்படாமல் நன்மை வேண்டுமா? இதை நண்பர்களுக்கு அனுப்புங்கள்! Image Via keepcalm-o-matic
Comments